மதரஸாக்களுக்கான வருமானம் குறித்து விசாரணை நடத்த அரசு முடிவு!

லக்னோ (22 நவ 2022): உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் வருமான ஆதாரங்களை ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக உ.பி அரசு நடத்திய சர்வேயில் பெரும்பாலான மதரஸாக்கள் ஜகாத்தை வருமானமாக அறிவித்துள்ளன. இந்த விசாரணையின்படி1500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் எங்கிருந்து இந்த ஜகாத் (நன்கொடை) பெறுகின்றன என்பது இப்போது கண்டறியப்படும். குறிப்பாக நேபாள எல்லையில் அமைந்துள்ள உ.பி., மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில், வருமான ஆதாரம் குறித்த…

மேலும்...

குறிவைக்கப்படும் மதரஸாக்கள் – அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியம் கண்டனம்!

புதுடெல்லி (05 செப் 2022): மதரஸாக்கள் குறி வைக்கப்படுவது குறித்தும், உத்தரபிரதேச மாநிலத்தில் மதரஸாக்களை கணக்கெடுப்பது ஏன்? என அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. AIMPLB இன் செயற்குழு உறுப்பினர் காசிம் ரசூல் இலியாஸ் இதுகுறித்து கூறும்போது, “உத்தரப்பிரதேசம் மற்றும் அசாமில் மதரஸாக்கள் குறிவைக்கப்படுகின்றன. அஸ்ஸாமில், சில மதரஸாக்களை இடித்துவிட்டு பொதுவான பள்ளிகளாக மாற்றி வருகின்றன. மதக் கல்வியைக் கட்டுப்படுத்துவதும், அதற்குப் பதிலாக மதச்சார்பற்ற கல்வியை ஊக்குவிப்பதும்தான் பிரச்சினை என்றால்,…

மேலும்...

மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை ஆய்வு செய்ய ஒன்றிய அமைச்சர் கோரிக்கை!

பாட்னா (03 செப் 2022): பீகாரில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை உத்தரபிரதேசத்தில் உள்ளதைப் போன்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “பீகாரில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளில், குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் உள்ள சீமாஞ்சல் பகுதியில் ஆய்வு நடத்த நிதிஷ் குமார் அரசிடம் கோரிக்கை வைத்தோம். இந்த பிராந்தியங்களில் யார் மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை நடத்துகிறார்கள், யார் தங்குகிறார்கள்…

மேலும்...

மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன்பு தேசிய கீதம் பாட முடிவு!

லக்னோ (25 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநில மதரசாக்களில் வகுப்புகள் தொடங்கு முன்பு தேசிய கீதம் பாட மதரசா கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கூட்டம் ஒன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யவும், மாணவர்களின் சேர்க்கையை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் அமைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. மே 14 மற்றும் மே 27 க்கு இடையில் நடைபெறும் ஆறு பாடங்களுக்கான தேர்வுகளை மதரசா வாரியம் நடத்தும் என்றும்…

மேலும்...

அஸ்ஸாமில் மதரஸா மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அரசு முடிவு!

கவுஹாத்தி (13 பிப் 2020): அஸ்ஸாமில் உள்ள இஸ்லாமிய மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு உள்ள 614 மதரஸாக்களையும், 101 சமஸ்கிருத பள்ளிகளையும் மூடவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவை அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றப்படும் என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த அம்மாநில கல்வி அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, “அரபி மதரஸாக்களில் பயில்வோர்கள் அரசு வேலைக்கு…

மேலும்...