குறிவைக்கப்படும் மதரஸாக்கள் – அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியம் கண்டனம்!

Share this News:

புதுடெல்லி (05 செப் 2022): மதரஸாக்கள் குறி வைக்கப்படுவது குறித்தும், உத்தரபிரதேச மாநிலத்தில் மதரஸாக்களை கணக்கெடுப்பது ஏன்? என அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

AIMPLB இன் செயற்குழு உறுப்பினர் காசிம் ரசூல் இலியாஸ் இதுகுறித்து கூறும்போது, “உத்தரப்பிரதேசம் மற்றும் அசாமில் மதரஸாக்கள் குறிவைக்கப்படுகின்றன. அஸ்ஸாமில், சில மதரஸாக்களை இடித்துவிட்டு பொதுவான பள்ளிகளாக மாற்றி வருகின்றன. மதக் கல்வியைக் கட்டுப்படுத்துவதும், அதற்குப் பதிலாக மதச்சார்பற்ற கல்வியை ஊக்குவிப்பதும்தான் பிரச்சினை என்றால், குருகுலங்களுக்கு எதிராக அரசாங்கம் ஏன் இதே நடவடிக்கை எடுக்கவில்லை?

உத்தரப் பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு, மதரஸாக்களில் ஆசிரியர்களின் எண்ணிக்கை, பாடத்திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க விரும்புவதாகக் கூறியுள்ளது. இது பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது.

பல மதரஸாக்கள் மதரஸா வாரியத்துடன் இணைக்கப்பட்டு, மாநில அரசுகளிடமிருந்து பகுதி நிதி மற்றும் மானியங்களைப் பெறுகின்றன, அரசாங்கத்தால் நிதியுதவி பெறாத மதரஸாக்களுக்கு, பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டப்படுகிறது. இந்த மதரஸாக்களில் கல்வி கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவு இலவசம். இதனால் ஏழை மாணவர்கள் படிக்க முடியும் என்பது உறுதி. அந்த வகையில், மதரஸாக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை இவற்றை பாதிக்கும். என்று இல்யாஸ் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply