விவேக் மரணம் குறித்து வதந்தி பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது புகார்!
சென்னை (17 ஏப் 2021) நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசியே காரணம் என வதந்தி பரப்புவதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே விவேக் உயிரிழந்த நிலையில் அவரது மரணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது….