சென்னை (17 ஏப் 2021) நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசியே காரணம் என வதந்தி பரப்புவதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே விவேக் உயிரிழந்த நிலையில் அவரது மரணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தடுப்பூசிக்கும் நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.