கும்பகோணத்தில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் மாசிமக பக்தர்களுக்கு அன்னதானம்!

கும்பகோணம் (06 மார்ச் 2023): கும்பகோணத்தில் மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு இன்று 6 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு பகுதியில் கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாசிமகம் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பக்தர்களுக்கு, கிஸ்வா அமைப்பு சார்பில் எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் தாசம், குடிதண்ணீர் பாட்டில்கள் என வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கனக்கான பக்தர்கள்…

மேலும்...