கும்பகோணத்தில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் மாசிமக பக்தர்களுக்கு அன்னதானம்!

Share this News:

கும்பகோணம் (06 மார்ச் 2023): கும்பகோணத்தில் மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு இன்று 6 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு பகுதியில் கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மாசிமகம் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பக்தர்களுக்கு, கிஸ்வா அமைப்பு சார்பில் எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் தாசம், குடிதண்ணீர் பாட்டில்கள் என வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கனக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து உணவு வகைகளை வாங்கி சென்றனர்.

அன்னதானம் நிகழ்வுக்கு திட்ட குழு தலைவர் கிரேட் வே ஜே.ஜாஹிர் உசேன் தலைமை வகித்தார். திட்ட குழு துணைத் தலைவர் சுமையா அபுல் கலாம் ஆசாத், முன்னிலை வகித்தார். கிஸ்வா தலைவர் கே. ஜாஹிர் உசேன், செயலாளர் அ.சிராஜிதீன், துணை செயலாளர் ஏ. பசீர் அகமது மற்றும் செயற்குழு உறுப்பினர் மேலக்காவேரி மிஸ்வா மு.அப்துல் அஜிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சமூக நல்லிணக்க விழாவிற்க்கு செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பக்தர்கள்,பொதுமக்கள் என அனைவரும் ஒத்துழைப்பு நல்கினர்.


Share this News:

Leave a Reply