மாட்டிறைச்சி வைத்திருக்காதவரை பொய் குற்றம் சாட்டி பசு பயங்கரவாதிகள் அடித்துக் கொலை!
பாட்னா (11 மார்ச் 2023): பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பசு பயங்கரவாத கும்பல் தொடர் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி 55 வயது முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் நசீம் குரேஷி. 55 வயது முதியவரான இவர் தனது உறவினர் பேரோஷ் குரேஷி என்பவருடன் சேர்ந்து ஜோகியா கிராமத்திற்குச்…