சென்னை (13 ஜன 2021): மாட்டிறைச்சியை வைத்து சங் பரிவார் முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலைகளை அரங்கேற்றி வரும் நிலையில் ஸ்ரீகிருஷ்ணா பீஃப் ஸ்டால் என்கிற பெயரில் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் அடங்கிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அந்த கடை எங்கிருக்கிறது? என்பது குறித்து தகவல் இல்லை என்றாலும் கடை கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என அறியப்படுகிறது.
அதில் “எங்கள் கடையில் ஹலால் செய்யப்பட மாட்டிறைச்சி கிடைக்கும்” என்கிற வாசகத்துடன் அனைத்து மத புகைப்படங்களும், எம்ஜிஆர்,ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் புகைப்படமும் அதில் உள்ளதுதான் ஹைலைட்.
முஸ்லீம் அல்லாதவர் இறைச்சிகடைகளில் முஸ்லீம் அல்லாதவர்களே இறைச்சி வாங்க மாட்டார்கள் என்பதும். ஹலால் செய்யப்பட இறைச்சிகளையே அவர்களும் விரும்புகிறார்கள் எனபதையே இந்த விளம்பரம் பறைசாற்றுகிறது.