பீகார் மின்னல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்வு!
பாட்னா (26 ஜூன் 2020): பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி இறந்தனர். மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்தது. 30 பேர் இந்நிலையில் மின்னல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.