பாட்னா (25 ஜூன் 2020): பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பீகாரின் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலியாகியுள்ளனர். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நவாடா மாவட்டத்தில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூர் மாவட்டத்தில் தலா 6 பேரும்,தர்பங்கா, மற்றும் பாங்கா மாவட்டங்களில் தலா 5 பேரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் மின்னல் மற்றும் மழை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.