ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா!

புதுடெல்லி (07 ஜூலை 2022): பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி, ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜ்யசபா பதவிக்காலம் இன்று முடிவடைய உள்ள நிலியில் ஒரு நாள் முன்னதாக, நேற்று அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் இது குறித்த கூட்டத்தில், ஒரு அமைச்சராக நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நக்வி ஆற்றிய பங்களிப்பிற்காக பிரதமர் மோடி நக்வியை பாராட்டினார். நக்வியுடன், ராம் சந்திர பிரசாத்…

மேலும்...

ஹஜ் யாத்திரை குறித்து ஒன்றிய அமைச்சர் விளக்கம்!

புதுடெல்லி (06 ஜூன் 2021): இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒன்றிய சிறுபான்மை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, சவூதி அரேபியா கடந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களை தடை செய்தது. இந்த ஆண்டும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், புதிய வகை கொரோனா குறித்து கவலைகள் எழுப்பப்படுவதாலும் இந்த முறை…

மேலும்...

ஹஜ் 2021 குறித்து மத்திய அமைச்சர் புதிய தகவல்!

புதுடெல்லி (19 அக் 2020): 2021 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை சர்வதேச வழிகாட்டுதல்களின்படி வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம் மேற்கொள்வது ஆகும். வருகிற 2021ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் பற்றிய முக்கிய காரணிகளை முடிவு செய்வதற்காக உயர்மட்ட அளவிலான கூட்டம் ஒன்று இன்று நடந்தது. இதில், மத்திய சிறுபான்மையோர் அமைச்சர் முக்தார் நக்வி கலந்து கொண்டார். கூட்டத்தின் பின்பு செய்தியாளர்களிடம்…

மேலும்...

போராட்டக் காரர்களை வில்லன்கள் என சித்தரித்த முக்தார் அப்பாஸ் நக்வி!

புதுடெல்லி (03 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்பப்வர்கள் அனைவரும் வில்லன்களாக சித்தரித்துள்ளார் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 50 நாட்களுக்கும் மேலாக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஷஹீன் பாக்கில் பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் வில்லன்களாக மாறுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,…

மேலும்...