போராட்டக் காரர்களை வில்லன்கள் என சித்தரித்த முக்தார் அப்பாஸ் நக்வி!

Share this News:

புதுடெல்லி (03 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்பப்வர்கள் அனைவரும் வில்லன்களாக சித்தரித்துள்ளார் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 50 நாட்களுக்கும் மேலாக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஷஹீன் பாக்கில் பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் வில்லன்களாக மாறுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டம், மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்குத்தான்; மக்களின் குடியுரிமையை பறிக்க அல்ல என ஜனாதிபதியே நாடாளுமன்ற., கூட்டுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்திய குடிமக்களுக்கு இச்சட்டம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இச்சட்டத்தை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது.” என்றார்,.


Share this News:

Leave a Reply