தேச விரோதி – ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைருக்கு எதிராக பாஜக தலைவர் காவல்துறையில் புகார்!
புதுடெல்லி (06 செப் 2022): பிரபல ஊடகவியலாளரும் Alt News இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு எதிராக பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, காவல்துறையில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில், ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போது ஒரு கேட்சை கைவிட்டதால், கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் சமூக ஊடகங்களில் மோசமான ட்ரோலிங்கிற்கு உட்படுத்தப்பட்டார். சமூக…