புதுடெல்லி (28 ஜூன் 2022): உண்மைச் சரிபார்ப்பு வலைத்தளமான AltNews இன் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா முஹம்மது நபி குறித்து பரப்பிய அவதூரை உலகறிய செய்தவர் முஹம்மது ஜுபைர்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அவசர பதிந்த ஒரு ட்வீட் குறித்த புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் முகமது ஜுபைரை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு திங்கள்கிழமை கைது செய்தது.