ஹிஜாப் பிரச்சினையை கிளப்பிய வார்டில் பாஜக டெபாசிட் இழப்பு!

மதுரை (22 பிப் 2022): மதுரை மேலூரில் வாக்குப்பதிவு நடைபெற்ற தினத்தில் பாஜக பூத் ஏஜெண்ட் ஹிஜாபை கழற்றச் சொன்ன வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாஜக அங்கு டெபாசிட் இழந்தது. மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் அமைக்கப்பட்ட 44 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மேலூரில் உள்ள சுந்தரேஸ்வர வித்யாலயா பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8வது வார்டில் திமுக வேட்பாளரான முகமது யாசின் (சேர்மன் வேட்பாளர்)…

மேலும்...

மதுரை அருகே முஸ்லீம் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட்!

மதுரை (19 பிப் 2022): மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் முஸ்லீம் பெண் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது…

மேலும்...