ஹிஜாப் பிரச்சினையை கிளப்பிய வார்டில் பாஜக டெபாசிட் இழப்பு!

Share this News:

மதுரை (22 பிப் 2022): மதுரை மேலூரில் வாக்குப்பதிவு நடைபெற்ற தினத்தில் பாஜக பூத் ஏஜெண்ட் ஹிஜாபை கழற்றச் சொன்ன வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாஜக அங்கு டெபாசிட் இழந்தது.

மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் அமைக்கப்பட்ட 44 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மேலூரில் உள்ள சுந்தரேஸ்வர வித்யாலயா பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8வது வார்டில் திமுக வேட்பாளரான முகமது யாசின் (சேர்மன் வேட்பாளர்) 651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக முத்து. கிருஷ்ணகுமார் 125 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அம்சவேணி 10 வாக்குகளும், அமமுக வேட்பாளர் வழக்கறிஞர் அப்துல்காதர் 10 வாக்குகளும், நாம்தமிழர் வேட்பாளர் முஜிபுர்ரஹ்மான் 14, தேமுதிக வேட்பாளர் சரவணன் 6 வாக்குகளும் பெற்று, திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply