காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே மோதல்!

ஸ்ரீநகர் (01 நவ 2020): ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே ஏற்பட்ட மோதலில் ஹிஜ்புல் முஜாஹிதின் பயங்கரவாத தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீநகரில் உள்ள ரங்கிரெட்டி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இந்த மோதல் நடந்துள்ளது. போலீசாரின் தேடலின் போது ஏ.கே .47 துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டன.சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறை கூட்டாக இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து…

மேலும்...

இந்திய சீனா ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதல் – பரபரப்பு வீடியோ!

லடாக் (13 ஜூன் 2020): இந்திய சீன படையினர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சிக்கிமில் இந்திய மற்றும் சீன படை வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டதட்ட ஐந்து நிமிடம் ஓடும் அந்த வீடியோ காட்சிகளில், பனியால் சூழப்பட்ட அந்த மலைப்பகுதியில் இந்தியா – சீனா வீரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். திரும்பி செல்லுங்கள், சண்டையிட வேண்டாம் என்று இரு தரப்பிலிருந்தும் வீரர்கள்…

மேலும்...

இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் பலி – பரபரப்பு தகவல்!

லடாக் (16 ஜூன் 2020): இந்திய சீன எல்லையில் திங்கள் கிழமை இரவு நடைபெற்ற இரு நாட்டு ராணுவத்தினருக்கிடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியானதாக லடாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு  இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக ஒரு இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ஜவான்கள் என மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்…

மேலும்...

கோவையில் பாஜக இந்து முன்னணியினர் இடையே மோதல் – 3 பேருக்கு அரிவாள் வெட்டு!

கோவை (02 மார்ச் 2020): கோவையில் பாஜக, இந்து முன்னணியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை கவுண்டம்பாளையம் தீயணைப்பு அலுவலகம் அருகே இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டன. அதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட், ஹரீஷ் ஆகியோர் கார் ஓட்டி வந்த டிரைவருக்கு ஆதரவாகப்…

மேலும்...

சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர்களிடையே பயங்கர ஆயுதங்களுடன் மோதல்!

சென்னை (04 பிப் 2020): சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தில் இரண்டு குழுவாக கேன்டீனுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர் இந்த சண்டையில் கத்தி, கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தியதால் அங்கு கூடியிருந்த மாணவர்கள் பதறியடித்து ஓடினர். கையில் பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மோதலில் ஈடுபட்ட இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மாணவர்கள் செல்போனில் பதிவு செய்து…

மேலும்...