ஆடு வளர்த்து 5 லட்சத்துக்கு கடிகாரம் வாங்கியது எப்படி? அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி!
சென்னை (18 டிச 2022): ரபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா? என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்பவர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள்…