ஆடு வளர்த்து 5 லட்சத்துக்கு கடிகாரம் வாங்கியது எப்படி? அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி!

Share this News:

சென்னை (18 டிச 2022): ரபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா? என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பான அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்பவர் கட்டியிருக்கிறார்.

அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?

வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?

இவ்வாறு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்


Share this News:

Leave a Reply