அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக!

சென்னை (09 மார்ச் 2021): அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்...

தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு கொரோனா தொற்று!

சென்னை (24 செப் 2020): தேமுதிக தலைவர் விஜய்காந்த் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜயகாந்த் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்றபோது, அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பது தென்பட்டது. அது உடனடியாக சரிசெய்யப்பட்டது. தற்போது விஜயகாந்த் நலமுடன் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்காந்த் விரைவில் குணமடைய வேண்டும் என…

மேலும்...

அதை அவர்தான் சொல்லணும் – புள்ளி வைக்கும் பிரேமலதா!

ராமநாதபுரம் (31 ஆக 2020): சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பிரேமலதா வந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடந்த கால தேர்தல்களை போல் அல்லாமல் இந்தமுறை தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றி விரைந்து அறிவிப்போம் எனத் தெரிவித்தார். மேலும் தற்போதைய நிலவரப்படி தேமுதிக தனி போட்டியிட வேண்டும் என்பது தான் தொண்டர்கள்…

மேலும்...

தொண்டர்கள் மத்தியில் விஜய்காந்த் உருக்கமான பேச்சு!

தமக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே தமது முதல் கடவுள் என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். சென்னை கொரட்டூரில் தே.மு.தி.க சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. 101 பானைகளில் பொதுமக்களுடன் இணைந்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பொங்கல் விழாவைக் கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். பிறகு மேடையில் இந்தியாவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்வதாகக் கூறினார். இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில்…

மேலும்...