ராமநாதபுரம் (31 ஆக 2020): சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பிரேமலதா வந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடந்த கால தேர்தல்களை போல் அல்லாமல் இந்தமுறை தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றி விரைந்து அறிவிப்போம் எனத் தெரிவித்தார். மேலும் தற்போதைய நிலவரப்படி தேமுதிக தனி போட்டியிட வேண்டும் என்பது தான் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும் எதுவாக இருந்தாலும் வரும் தைப்பொங்கலுக்குள் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என என எதிர்பார்க்கிறோம் என பிரேமலதா தெரிவித்தார்.