விருதுகளை குவிக்கும் ஜெய் பீம் திரைப்படம்!

சென்னை (24 ஜன 2022): ஞானவேல் எழுதி இயக்கி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்திருந்தார். இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு, அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை சம்பவத்தை திரைக்கதை ஆக்கியிருந்தனர். இப்படம் பலவேறு தரப்பிலும் பாராட்டைப் பெற்றது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் இப்படத்தை பாராட்டினர்….

மேலும்...

ராஜீவ் காந்தி பெயரில் விருது அறிவித்து ஒன்றிய பாஜக அரசுக்கு சிவசேனா அரசு பதிலடி!

மும்பை (11 ஆக 2021): ஐடி துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் மகாராஷ்டிரா அரசு விருது அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் விருது, ஜர் தியானசந்த் கேல் ரத்னா என்று மாற்ற மோடி அரசு எடுத்துள்ள நிலையில் ஒன்றிய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஒன்றிய பாஜக அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தவ் தாக்கரே அரசு எதிராக அதிரடி காட்டியுள்ளது. இதுகுறித்து அவர்…

மேலும்...

விருதை திருப்பி அளிக்கிறேன் – வைரமுத்து திடீர் அறிவிப்பு!

சென்னை (29 மே 2021): கேரளாவின் மிக உயரிய விருதான ஓ.என்.வி. விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். வைரமுத்துக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது சின்மயி மாறும் நடிகை பார்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை…

மேலும்...

சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினத்தில் ஜித்தா தமுமுகவிற்கு விருது!

ஜித்தா (07 டிச 2020): சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினமான கடந்த 5-12-20 அன்று ஜித்தா தமுமுகவிற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜித்தாவிலுள்ள இந்திய தூதரகத்தில் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் 2020 Indian Pilgrims Welfare Forum (IPWF) அமைப்பால் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தொடர்ந்து உலகமுழுவதும் தன்னார்வலர்கள் கொண்டு மனிதநேயப்பணி செய்யும் தமுமுகவிற்கு விருதுகள் வழங்கப்பட்ட து. தமுமுக சார்பில் ஜித்தா மண்டல பொறுப்பாளர் பொறியாளர் கீழை இர்பான் அவர்களிடம் துணைத்தூதர் Y. சாபிர் அவர்கள்…

மேலும்...

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு மக்கள் தூதர் விருது!

சென்னை (29 ஜூன் 2020): ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு லண்டனில் உள்ள உலக மனிதநேய அமைப்பு சார்பில் கொரோனா பணிக்காக சிறந்த மக்கள் தூதர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : இங்கிலாந்து நாட்டின் தலைநகரமாக உள்ள லண்டனில் தலைமையிடமாக கொண்ட உலக மனித நேய அமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே….

மேலும்...

தமிமுன் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது – மகாரஷ்டிர பல்கலைக் கழகம் கவுரவம்!

புனே (22 பிப் 2020): மகாராஷ்டிராவின் பல்கலைக் கழகம் ஒன்று மனித நேய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது வழங்கி கவுரவித்துள்ளது. . மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்று, நாட்டில் உள்ள முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், சிறந்த இளம் எம்.எல்.ஏ. விருதிற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான…

மேலும்...

தன்னைப் பற்றிய பிரேக்கிங் நியூசை தானே வாசித்த செய்தி வாசிப்பாளர் – VIDEO

திருவனந்தபுரம் (13 பிப் 2020): தன்னைப் பற்றிய செய்தியை தானே வாசித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீஜா ஷியாம். கேரளாவில் உள்ள மாத்ருபூமி என்ற மலையாள தொலைக்காட்சியில் தலைமை இணை ஆசிரியராக இருக்கும் ஸ்ரீஜா ஷியாம் என்பவர் நேற்று காலையில் வழக்கம்போல் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கேரள அரசு சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது ஸ்ரீஜாவுக்கு என அறிவித்தது. இதனை பிரேக்கிங் செய்தியாக மாத்ருபூமி வெளியிட அந்த செய்தியை ஸ்ரீஜாவே வாசித்தார். தன்னுடைய புகைப்படமும்…

மேலும்...

விருதை திருப்பி அளித்த இயக்குநர் சேரன்!

சென்னை (02 பிப் 2020): பிரபல எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது சமீபத்திய படத்துக்கு விமர்சனம் எழுதாததால் அவர்கள் கொடுத்த விருதை திரும்ப அளித்தார் சேரன். பிரபலமான எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தென்னிந்திய அளவில் பெரும் சினிமா விருது நிகழ்ச்சியை நடத்தியது. தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்திய பிராந்தியங்களில் பிரபலமான அந்த நிறுவனம் சேரனுக்கு ‘ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்” என்ற விருதை வழங்கியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சேரன் நடித்து ‘ராஜாவுக்கு செக்’ படம் வெளியானது. இந்த…

மேலும்...