புனே (22 பிப் 2020): மகாராஷ்டிராவின் பல்கலைக் கழகம் ஒன்று மனித நேய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
.
மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்று, நாட்டில் உள்ள முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது.
அந்த வகையில், சிறந்த இளம் எம்.எல்.ஏ. விருதிற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரியை தேர்வு செய்தது.
இந்தநிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில், நாட்டின் சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரிக்கு வழங்கப்பட்டது.
விருதை பெற்ற பின் பேசிய தமிமுன் அன்சாரி, இறைவனுக்கும் தமிழுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.