திமுகவில் பல திருப்பங்கள் நடக்கும் – விலக்கப்பட்ட வி.பி துரைசாமி பரபரப்பு பேட்டி!

சென்னை (22 மே 2020): திமுகவிலிருந்து இன்னும் பலர் விரைவில் வெளியேறுவார்கள் என்று திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த விபி துரைசாமி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை சீட் கொடுக்காததால் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், விபி துரை சாமி, மு.க ஸ்டாலினுக்கு எதிராக சில கருத்துக்களை பொது வெளியில் முன்வைத்தார். இதனை அடுத்து, கட்சியில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்ட துரை சாமி, சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்….

மேலும்...

பாஜகவுடன் கூட்டு – திமுக முக்கிய தலைவர் அதிரடி நீக்கம்!

சென்னை (21 மே 2020): திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். துரைசாமி பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை வி.பி.துரைசாமி சந்தித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வி.பி. துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணைபொதுச்செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்...