பாஜகவுடன் கூட்டு – திமுக முக்கிய தலைவர் அதிரடி நீக்கம்!

Share this News:

சென்னை (21 மே 2020): திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

துரைசாமி பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை வி.பி.துரைசாமி சந்தித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வி.பி. துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணைபொதுச்செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று துரைசாமி தெரிவித்துள்ளார்.


Share this News: