முதல்வர் மீது வெங்காய வீச்சு!

பாட்னா (03 நவ 2020): பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28 நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 3) நடைபெற்று வருகிறது. மேலும், இறுதிகட்ட தேர்தல் நவம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன்…

மேலும்...

வெங்காய விலை கிடுகிடு உயர்வு!

சென்னை (20 அக் 2020): ஆந்திரா, கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்.அங்கு இருந்து வரும் வெங்காயத்தின் வரவு குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை மேலும் 20 முதல் 30 வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு…

மேலும்...

ஒருவழியாக விலை குறைந்தது!

சென்னை (28 ஜன 2020): வெங்காயத்தின் விலை ஒருவழியாக குறைந்து வருகிறது. சமீபத்தில் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்துக்கு சென்றதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ஒரு கிலோ 200 ரூபாய் வரை அதிகரித்து பொதுமக்களை அதிகம் அவதிக்குள்ளாக்கியது. இதனால், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்தது. இதனைத்தொடர்ந்து, வெங்காயம் விலை சற்று குறைய தொடங்கியது….

மேலும்...