ஒருவழியாக விலை குறைந்தது!

Share this News:

சென்னை (28 ஜன 2020): வெங்காயத்தின் விலை ஒருவழியாக குறைந்து வருகிறது.

சமீபத்தில் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்துக்கு சென்றதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ஒரு கிலோ 200 ரூபாய் வரை அதிகரித்து பொதுமக்களை அதிகம் அவதிக்குள்ளாக்கியது.

இதனால், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்தது.

இதனைத்தொடர்ந்து, வெங்காயம் விலை சற்று குறைய தொடங்கியது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் வரவு தற்போது அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை குறைய தொடங்கி உள்ளது.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. இதனால், இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply