ஹஜ் 2023 க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 10
புதுடெல்லி (12 பிப் 2023): ஹஜ் 2023க்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 10 ஆகும். என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆவணங்களுடன் ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது பிப்ரவரி 10, 2023 முதல் தொடங்கியது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை hajcommittee.gov.in/haf23 என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 6 ஆம் தேதி சிறுபான்மை விவகார அமைச்சகம் புதிய ஹஜ் கொள்கையை அறிவித்தது, அதன் கீழ் விண்ணப்ப படிவங்கள் இலவசமாக கிடைக்கின்றன மற்றும் ஒரு யாத்ரீகரின்…