ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு!

டெஹ்ரான் (05 டிச 2022): ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது. ஈரானில் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம். இதற்கிடையே, ஹிஜாப் மத உடைக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க 2006-ல் அறநெறிக் காவல் பிரிவை ஈரான் அரசு தொடங்கியது. ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தப் பிரிவுக்கு, உடை கட்டுப்பாடுகளை…

மேலும்...

ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகள் நிறுவ கர்நாடக வக்பு வாரியம் முடிவு!

பெங்களூரு (01 டிச 2022): கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் தடையை தொடர்ந்து அங்கு முஸ்லிம் மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகளை நிறுவ கர்நாடக வக்ஃப் வாரியம் திட்டமிட்டுள்ளது. மங்களூரு, ஷிவமொக்கா, ஹாசன், குடகு ஆகிய இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்படும். இக்கல்லூரிகளுக்கான நிதி வக்பு வாரியம் மூலம் திரட்டப்படும். மார்ச் 2021 இல் கர்நாடகாவில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள அரசுக் கல்லூரிகளில் ஹிஜாப் தடை அமலில்…

மேலும்...

ஹிஜாபை கழற்றிய நடிகை கைது!

தெஹ்ரான் (21 நவ 2022): இரான் திரைப்பட நட்சத்திரம் ஹெங்கமே காசியானி ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவில் ஹிஜாப் அணியாமல் தோன்றியதால் அவர் கைது செய்யப்பட்டார். காசியானி இன்ஸ்டா பதிவில், ஹிஜாப் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் இதுவே தனது கடைசி இடுகையாக இருக்கலாம். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எனக்கு என்ன நேர்ந்தாலும், எனது கடைசி மூச்சு வரை ஈரானியர்களுடன் இருப்பேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். என்று காசியானி தெரிவித்துள்ளார்.

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டது தவறு – உச்ச நீதிமன்ற நீதிபதி!

புதுடெல்லி (20 செப் 2022): கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதாம்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் அத்தியாவசிய மதப் பழக்க வழக்கங்கள் தொடர்பான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சென்றிருக்கக் கூடாது என்று நீதிபதி துலியா தெரிவித்தார்….

மேலும்...

கேள்விக்குறியாகும் முஸ்லிம் மாணவிகளின் கல்வி – பியுசிஎல் கவலை!

பெங்களூரு (10 செப் 2022): கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் மாநில அரசின் நடவடிக்கையாலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாலும் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பான, ‘சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்’ கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பியூசிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசின் உத்தரவும், அதனை வழிமொழிந்துள்ள நீதிமன்ற உத்தரவையும் மேற்கோள் காட்டி, உயர் நீதிமன்ற தீர்ப்பு, பாரபட்சமற்ற கல்வி உரிமை, சமத்துவ உரிமை,…

மேலும்...

ருத்ராட்சம் மற்றும் சிலுவையுடன் ஹிஜாபை ஒப்பிட முடியாது – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (08 செப் 2022): ருத்ராக்ஷம் மற்றும் சிலுவையை ஹிஜாபுடன் ஒப்பிட முடியாது ஏனெனில் அவை சட்டைக்குள் அணிந்திருப்பதால் மற்றவர்களுக்குத் தெரிவதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்துள்ள நிலையில் இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனல் கர்நாடக அரசின் உத்தரவை தடை செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில்…

மேலும்...

மினி மற்றும் மிடியுடன் மாணவிகள் பள்ளிக்கு வரலாமா? – ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு விசாரணை!

புதுடெல்லி (05 செப் 2022): கல்வி நிறுவனங்களுக்கு மாணவிகள் மினி அல்லது மிடி அணிந்து வர அனுமதிக்கலாமா? என்று ஹிஜாப் குறித்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கர்நாடகா மாநில பாஜக அரசு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கர்நாடக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முந்தைய…

மேலும்...

ஹிஜாப் அணிந்தால் வேலையில்லை – அதிர வைக்கும் தகவல்!

நெதர்லாந்து ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாடுகளில் ஹிஜாப் அணிந்து வேலைக்கு விண்ணப்பிக்கும் 65 சதவீத பெண்கள் நிராகரிக்கப்படுவதாக அதிச்சித்தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, ​​ஹிஜாப் படங்களைத் தங்கள் CV உடன் இணைக்கும் முஸ்லீம் பெண்கள், தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்காமலேயே நிராகரிக்கப்படுகின்றனர். இந்த மூன்று நாடுகளிலும் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் எந்த அளவிற்கு இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்பது கள ஆராய்ச்சியின் மூலம் வெளியாகியுள்ளது. இது…

மேலும்...

முஸ்லிம் கடைகளில் தங்கம் வாங்கக்கூடாது – இந்துத்துவாவினர் வலியுறுத்தல்!

பெங்களூரு (26 ஏப் 2022): முஸ்லிம் கடைகளில் தங்கம் வாங்கக்கூடாது என்று இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் உத்தரவிட்டுள்ளனர். பாஜக ஆளும் கர்நாடகாவில் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் தலைவிரித்து ஆடுகின்றன. ஹிஜாப் தடை, ஹலால் இறைச்சி, முஸ்லிம் வியாபாரிகள் மீதான உளவியல் தாக்குதல் என தொடரும் பிரச்சனை தற்போது அட்சய திருதியையின் போது கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள் நடத்தும் கடைகளில் தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்துக்களை வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து ஸ்ரீ ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறுகையில்,…

மேலும்...

தமிழகத்தில் பள்ளியில் ஹிஜாப் தடையா? – பெற்றோர் காவல்துறையில் புகார்!

சென்னை (23 ஏப் 2022): சென்னை தாம்பரம் சங்கர வித்தியலாய பள்ளியில் பெற்றோர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர தடை விதிக்கப் பட்டதை அடுத்து பெற்றோர் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தை சேர்ந்த ஆசீக் மீரான் என்பவர் கிழக்கு தாம்பரத்தில் இயங்கிவரும் சங்கர வித்யாலயா பள்ளியில் தனது 4 வயது குழந்தைக்கு LKG வகுப்பு சேர்க்கைக்காக மனைவி, குழந்தையுடன் சென்றிருந்தனர். பள்ளியில் வளாகத்தில் விண்ணப்பம் பெறுவதற்காக அமர்ந்திருந்தபோது, பள்ளியின் அட்மின் மேலாளர் சுந்தரராமன் என்பவர், குழந்தையின்…

மேலும்...