வளைகுடா நாடுகளுக்கு வருகிறது புதிய போக்குவரத்து சட்டம்!

குவைத் (31 ஆகஸ்ட் 2025): வளைகுடா (GCC) நாடுகளில் வாகனங்களில் பயணம் செய்வோருக்கான போக்குவரத்து விதிமுறை மீறல்களை ஒருங்கிணைக்கும் திட்டம் 95% நிறைவடைந்துள்ளது. இதற்கான புதிய போக்குவரத்து சட்டம் பற்றி GCC பொதுச் செயலாளர் ஜாஸிம் முகம்மது அல்-புதைவி அறிவித்துள்ளார். சமீபத்தில் குவைத் நாளிதழான அல் கபாஸ்க்கு இவர் அளித்த நேர்காணலில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் GCC நாடுகளுக்கு இடையே நிகழும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் உடனடியாக தவறிழைத்தவருக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். (இந்நேரம்.காம்) இதுநாள்…

மேலும்...

GCC நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

குவைத் (10 ஆகஸ்ட் 2025):  வளைகுடா (GCC) நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. குவைத் நாட்டிற்குச் செல்ல இனி தனியே விசா எடுக்கத் தேவையில்லை.  “ஆன் அரைவல்” விசா மூலம் இனி எவரும் குவைத்திற்கு எளிதாகச் செல்லலாம். சுற்றுலா செல்வோரும் இந்த விசாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என குவைத் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை, குவைத் நாட்டின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரான ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல்-சபாஹ் அறிவித்துள்ளார். குவைத் நாடு…

மேலும்...

புகைப்படத்தைப் பரப்பினால், ஒரு லட்சம் ரியால் அபராதம்!

தோஹா (05 ஆகஸ்ட் 2025):  முன் அனுமதி பெறாமல் ஒருவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் பரப்பினால், ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 100,000 கத்தார் ரியால் அபராதம் (இந்திய ரூபாய் மதிப்பில் 23.5 லட்சம்) விதிக்கப்படும் என கத்தார் நாடு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டத் திருத்தங்களை இன்று கத்தார் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது சைபர் குற்றமாகக் கருதப்படும் என்றும் அறிவித்துள்ளது. கத்தார் நாட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் வருகை தரும் சுற்றுலா பயணிகள், நகரின் பொது…

மேலும்...
மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!

மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!

மஸ்கட், ஓமான் (17 ஏப்ரல் 2024):  ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இல் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஓமானில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியதால் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். விமானங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் பருவ நிலை மாற்றம் காரணமாக அசாதாரண சூழல் நிலவுகிறது. சூறைக்காற்று, புயல், மழை என கடந்த இரு நாட்களாக வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓமானில், நேற்று 16 ஏப்ரல்…

மேலும்...

இந்தியாவுக்கான விமான தடையை நீக்கியது ஓமான்!

மஸ்கட் (24 ஆக 2021): இந்தியாவுக்கான விமான தடையை ஓமான் அரசு நீக்கியுள்ளது. கோவிட் பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஓமான் தடை விதித்திருந்தது. கடந்த 4 மாதங்களாக இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு ஓமான் அரசு விதித்திருந்த விமானம் மற்றும் தரை கப்பல் போக்குவரத்து தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஓமான் அரசு அங்கிகரித்துள்ள Oxford AstraZeneca, Pfizer, Sputnik மற்றும் Synovac கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் பெற்றவர்கள் ஓமானுக்கு வரலாம். அதேவேளை இரண்டாவது…

மேலும்...

ஓமானில் தண்டனை இல்லாமல் நாடுகளுக்கு திரும்பி செல்ல கால அளவு நீட்டிப்பு!

மஸ்கட் (06 ஜன 2021): போதுமான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பும் திட்டம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ஓமானின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், அமுறையான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை ஆபராதம் அல்லது தண்டனை இல்லாமல் திருப்பி அனுப்பும் திட்டம் டிசம்பர் 31 வரை அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஓமானிய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது….

மேலும்...