‘மௌனத்தின் பாடல்’ – கவிதை நூல் விமர்சனம்!

இதயமெல்லாம் இனிக்கும் இளம்கவிஞர் இப்னு ஹம்தூனின் மானுடம் பாடும் ‘மௌனத்தின் பாடல்’ பற்றிய விமர்சனம். இரத்தினச் சுருக்கமான இலக்கிய வடிவம் கவிதை. சங்ககாலம் முதல் சமகாலம் வரை உள்ள கவிதைகளில் இன்றைய கவிதைகள் உணர்ச்சியிலும் உள்ளடக்கத்திலும் புதியதொரு உருமாற்றம் பெற்றுள்ளன. கவித்திறனும் கருத்தாழமும் மிக்க கவிதைகள் மனித நேயம் – மானுட மகிழ்ச்சி – மக்கள் சுதந்திரம் – மனித எழுச்சி என்கிற மனிதமேம்பாட்டால் தமிழுக்கும் வாழ்வுக்கும் புது முகம் தந்துள்ளன. சமகால அழுக்கை – சமூக…

மேலும்...

பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்…!

அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துகள் பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம் மானந்தான் முதன்மையென்று மண்ணில் நாட்டி ….மகத்தான விடுதலையின் மாட்சி கண்டோம் ஆனந்த சுதந்திரத்தை அடைந்து விட்டோம் ….அதற்கான விலைதந்தோம்; மறந்து நின்றோம் வீணிந்த சுதந்திரமோ வினவக் கேட்போர் ….விடையாக ஆனபடி போகும் வாழ்வில் ஏனிந்த இழிநிலைகள் எண்ணிப் பார்த்து ….எழுதிவிட்டேன் கவிதையிலே கேட்டுப் பாரீர். அடிமையராய் வாழ்ந்தபோதில் அடக்கு முறைகள் ….அன்றாடத் துயரோடு மிகுந்த இன்னல் துடிதுடித்தோம் துயர்நீங்கிச் சிறக டிக்க ….தூய்மையான தன்னாட்சி…

மேலும்...
இழிந்த சாதி (கவிதை)

இழிந்த சாதி (கவிதை)

தேர் வராது என்றவர்கள் தேர்தல் வருகிறது என்றதும் சேரிக்குள் நடந்து வந்து செல்லங் கொஞ்சுகிறீர்கள்! நீர்பிடிக்கவும், பிணம் அடக்கவும் வேறிடம் உனக்கு என்றவர்கள் ஓட்டுப் போட மட்டும் வா என்னோடு என்கிறீர்கள். செருப்பணிந்து நடக்காதே என்று உத்தரவிட்டவர்கள் செருப்பாய்த் தேய்வேன் என்று சத்தியம் செய்கிறீர்கள். பக்கம் பக்கம் நின்று படமெடுத்துக் கொள்கிறீர்கள் பாம்பின் விஷம்போல பாகுபாட்டை ஒளித்துவைத்து. இந்தியச் சம்பந்தம் பேசுகிற உங்களால் இரத்தச் சம்பந்தம் பேச முடிவதில்லை. பதவியெனும் வேசியின் பார்வைக்கு ஏங்கும் உங்கள் ‘பண்பாட்டை’…

மேலும்...