பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை (14 ஜூன் 2021): பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் முழு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தபப்டும் என்று தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் சங்கிலித் தொடரை உடைக்க மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடித்ததால் தான் இந்தளவிற்கு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. எனவே விதிமுறைகளை…

மேலும்...

கும்பமேளாவில் பொய்யாக நடந்த கொரோனா பரிசோதனை!

புதுடெல்லி (13 ஜூன் 2021): உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொரோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. ஹரித்வார், டேராடூன், டெஹ்ரி, பவுரி ஆகிய மாவட்டங்களில் கும்பமேளா நடத்தப்பட்டது. வடஇந்தியாவில் பல லட்சம் பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக நாடு முழுக்க கொரோனா பரவியதாக புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொரோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பஞ்சாப்பை சேர்ந்த கும்பளேவில் கலந்து கொள்ளாத…

மேலும்...

பதில் சொல்லுங்கள் முதல்வரே – குஷ்பூ கேள்வி

சென்னை (12 ஜூன் 2021): “உங்களுக்கு வந்தா அது இரத்தம், எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?” என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு, சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப்…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒரு கோவில்!

பிரதாப்கர்(12 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒரு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்துவருகிறது. இதற்கிடையே அண்மையில் கோயம்புத்தூரில் கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க வேண்டி, கொரோனா தேவி சிலை எழுப்பப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. கேரளாவிலும் ஒருவர் கொரோனா தேவிக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்திவருகிறார். இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தின் சுக்லாப்பூர் கிராம மக்கள், ஒரு வேப்ப மரத்தின் கீழ் கொரோனா மாதாவிற்கு கோவில் கட்டியுள்ளனர். உள்ளூர் மக்களிடம் பணம் வசூலித்து…

மேலும்...

தடுப்பூசி குறித்து வாய் திறக்கக்கூடாது – மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!

புதுடெல்லி (10 ஜூன் 2021): தடுப்பூசி இருப்பு குறித்த விவரங்களை மாநிலங்கள் பகிரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய சுகாதார மிஷனின் மாநிலத் திட்ட இயக்குநர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தடுப்பூசி இருப்பு மற்றும் தடுப்பூசிகள் சேமித்துவைக்கப்பட்டுள்ள வெப்ப நிலை குறித்து மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பு (eVIN) உருவாக்கும் தரவுகளும் மற்றும் பகுப்பாய்வும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானது. அவற்றை வேறு எந்த நிறுவனங்களுடனோ, ஊடகத்துடனோ,…

மேலும்...

இதிலும் கேரளாதான் முதலிடம்!

புதுடெல்லி (10 ஜூன் 2021): கேரளாவும், மேற்கு வங்கமும் கோவிட் தடுப்பூசி மருந்துகளை வீணடிக்காமல் முழுவதுமாக பயன்படுத்தி உள்ளன. கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே ஒரு தீர்வு. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால், தடுப்பூசி திட்டம் தொய்வடைந்து உள்ளது. இந்த நிலையில், மாநில அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது மற்றும் வீணடிக்கப்பட்ட அளவு குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் படி, கடந்த மே மாதத்தில் கேரளாவும், மேற்கு வங்கமும் தடுப்பூசி மருந்துகளை…

மேலும்...

இந்தியாவில் ஒரேநாளில் உச்சத்தை தொட்ட கொரோனா மரணம்!

புதுடெல்லி (10 ஜூன் 2021); இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ள போதிலும் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மூன்றாவது நாளாக நேற்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 94 ஆயிரத்து 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினின் கொரோனா கால அடுத்த அதிரடி!

சென்னை (08 ஜூன் 2021): சமீபத்தில், அத்தியாவசியப் பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம் (1986)-ன் கீழ் கொரோனா மருத்துவப் பொருள்களின் விலையை, கேரள முதல்வர் பினராயி விஜயன் நிர்ணயம் செய்திருந்தார். அதன்படி, பிபிஇ கிட் – ரூ. 273, என்95 முகக் கவசம் – ரூ.22, மூன்று அடுக்கு முகக் கவசம் – ரூ.3.90, சானிடைசர் 100 மி.லி. ரூ.55 என்ற அளவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழ் நாட்டு அரசின் அறிவிப்பின்படி இப்போது இருப்பதிலேயே,…

மேலும்...

பலரது உயிர் போக மோடிதான் கரணம் – மம்தா கடும் விமர்சனம்!

கொல்கத்தா (08 ஜூன் 2021): “கோவிட் தடுப்பூசியை பிரதமர் மோடி இலவசமாக கொடுக்காததால் பலரது உயிர் பறி போனது” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் ஆற்றிய உரையில் தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என அறிவித்திருந்தார். பிரதமரின் அறிவிப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி’ “அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என பிப்ரவரி மாதம் முதல் பலமுறை…

மேலும்...

பேக்கரியை துவம்சம் செய்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்!

மதுரை (08 ஜூன் 2021): ஊரடங்கு காலத்தில் அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து துவம்சம் செய்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க பிரமுகர் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொரோனா முழு ஊரடங்கால் இந்த பேக்கரி அடைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்தனர். அவர்கள் பேக்கரி முன் போடப்பட்டிருந்த…

மேலும்...