அலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை!
புதுடெல்லி (24 நவ 2020): அலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் 43 மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை செய்து உள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் செயல்களில் ஈடுபட்ட மொபைல் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 ஏ பிரிவின் கீழ் இந்திய அரசின்…