உத்திர பிரதேசத்தில் மாற்றத்தை உருவாக்குவோம் – ஒவைசியின் மாணவர் பிரிவு உறுதி!

புதுடெல்லி (12 பிப் 2021): ஒவைசியின் AIMIM கட்சி ஒரு மாணவர் பிரிவை உருவாக்கி, பல்கலைக்கழக அரசியல் மற்றும் நாட்டில் தேர்தல்களில் தீவிரமாக செயல்பட தயாராகி வருகிறது. உத்தரப்பிரதேசம் அலகாபாத் பல்கலைக்கழக யூனியன் தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமின் மாணவர் பிரிவு போட்டியிடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவர் பிரிவு உருவாக்கப்பட்டது. உத்திர பிரதேசத்திலும் பீகாரிலும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்களை அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்தி…

மேலும்...

பாஜகவின் வெற்றிக்கு உதவுவதே உவைஸிதான் – பாஜக எம்பி பகீர் தகவல்!

புதுடெல்லி (14 ஜன 2021): பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியே கரணம் என்பதாக, பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். பிகாரில் தேஜஸ்வி யாதவின் வெற்றியை தட்டிப் பறித்தது உவைஸியே என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் சாக்ஷி மகாராஜ் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள மேற்கு வாங்க தேர்தலிலும் உவைஸி பாஜகவின் வெற்றிக்கு உதவுவார். என்பதாக சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் சாக்ஷி மகாராஜ் தெரிவிக்கையில்…

மேலும்...

ரஜினி, உவைஸியுடன் கூட்டணி – கமல் ஹாசன் பதில்!

நெல்லை (16 டிச 2020): உவைஸி, ரஜினியிடன் கூட்டணி வைப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். நெல்லையில் இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் , யாருடனும் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை ஓவைசியோடு எந்த பேச்சுவார்த்தையும் நடைபெற வில்லை, ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம். ஆன்மீகத்தை நோக்கி நான் செல்லவில்லை. என்னை நோக்கியும் அது வரத்தேவையில்லை. மக்களிடத்தில் ஆன்மீகம் இருக்கிறது என்றால் அதுவும் என் வாழ்வில் ஒரு அங்கமாகத்தான்…

மேலும்...

தமிழக சட்ட மன்ற தேர்தலில் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் அசாதுத்தீன் உவைசி!

ஐதராபாத் (15 டிச 2020): தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க அசாதுத்தீன் உவைசி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க்க ஒரு சக்தியாக உருவெடுத்த பிறகு, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. 2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் 25 இடங்களுக்கும் குறையாமல் AIMIM போட்டியிட வாய்ப்புள்ளது…

மேலும்...

மக்கள் மனதிலிருந்து பெயரை மாற்ற முடியாது – யோகிக்கு உவைசி பதிலடி!

ஐதராபாத் (30 நவ 2020): ஐதராபாத் நகரின் பெயரை பாக்யாநகர் என மாற்றப்படும் என்று உ..பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். ஐதராபாத் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, “ஐதராபாத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், ஐதராபாத்தின் பெயர் பாக்யநகர் என்று மாற்றப்படும்.”என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் AIMIM தலைவர் உவைசி கூறுகையில், “ஐதராபாத்தின் பெயரை மாற்றினாலும் மக்கள் மனதிலிருந்து ஐதராபாத் என்ற பெயரை…

மேலும்...

அஸாதுத்தீன் உவைசிக்கு முஸ்லீம் லீக் ஆதரவு!

ஐதராபாத் (29 நவ 2020): தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகராட்சி தேர்தலில் ஆசாதுதீன் ஒவைசியின் AIMIM ஐ ஆதரிப்பதாக முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் கார்ப்பரேஷன் தேர்தல் டிசம்பர் 1 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் AIMIM வேட்பாளர்களை ஆதரிப்பதாக தெலுங்கானா முஸ்லீம் லீக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜக இங்கு கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்….

மேலும்...

வடமாநிலங்களின் தவிற்க முடியாத தலைவராக வளர்கிறார் உவைசி – பிரபல ஊடகவியலாளர் கருத்து!

திருவனந்தபுரம் (13 நவ 2020): பீகாரில் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி தோல்விக்கு அசாதுத்தீன் உவைசியே காரணம் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று பிரபல மலையாள எழுத்தாளரும், ஊடகவியலாளருமான என்.எஸ்.மாதவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபல ஊடகத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: வடமாநிலங்களில் முஸ்லிம்களின் தவிற்கமுடியாத தலைவராக உவைசி வளர்ந்து வருவதையே பீகாரில் அவரின் வாக்கு சதவீதம் காட்டுகிறது. தேஜஸ்வி தலைமையிலான கூட்டணி வழக்கமான வாக்குகளை பெற்றதாக தெரியவில்லை. அதனை பெற்றிருந்தாலே தேஜஸ்வி கூட்டணி ஆட்சி…

மேலும்...

பீகாரில் அசாதுத்தீன் உவைசியின் AIMIM கட்சி மூன்று இடங்களில் முன்னிலை!

பாட்னா (10 நவ 2020): பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உவைசியின் (AIMIM) கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி…

மேலும்...

பாபர் மசூதி இடிக்கப்பட்டது சதிச்செயல் இல்லையா? – அசாதுதீன் உவைஸி வேதனை!

ஐதராபாத் (30 செப் 2020): பாபர் மசூதி இடிக்கப்பட்டது சதிச்செயல் இல்லையா? என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் உவைஸி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை…

மேலும்...

பீகாரில் 32 இடங்களில் போட்டியிடும் அசாதுத்தீன் உவைசி கட்சி!

ஐதராபாத் (10 ஜூன் 2020): ஐதராபாத் எம்பி அசாதுத்தீன் உவைசி தலைமையிலான AIMIM கட்சி, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களுக்கு போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது. AIMIM கட்சி பீகார் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் கிஷன்கஞ்ச் தொகுதியை வென்ற கம்ருல் ஹுதா என்ற எம்.எல்.ஏ. வை தொடர்ந்து பீகாரில் மேலும் கட்சியை விரிவு படுத்த உவைசி கட்சி முன்வந்துள்ளது. இதுகுறித்து பீகார் எய்ஐஎம் தலைவர்…

மேலும்...