அதானி குழும நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி உத்தரவு!

புதுடெல்லி (02 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதா? என அறிய விசாரணை நடத்த வேண்டி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை…

மேலும்...

மொபைல் மூலம் வாங்கி மோசடி செய்த 5 பேர் கைது – அபுதாபி போலீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அபுதாபி (18 பிப் 2021): தொலைபேசி மூலம் வாங்கி கணக்குகளில் பணம் கொள்ளையடித்த கும்பல் ஐந்து பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தொலைபேசிகள் மற்றும் பல சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தெரிந்துள்ளது. இவர்கள் கணக்கு இலவசம் என்று கூறி அவர்கள் பலரை தொலைபேசி மூலம் அழைப்பார்கள். பின்பு வங்கி…

மேலும்...

கொரோனா எதிரொலி – வங்கிகளின் முக்கிய சேவைகள் ரத்து -வேலை நேரம் மாற்றம்!

புதுடெல்லி (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன. அதன்படி, வங்கிகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுளள்து. அதாவது, தினமும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும்…

மேலும்...

வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு!

புதுடெல்லி (17 ஜன 2020): இந்திய வங்கிகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அதன் வசதி ரத்து செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம் ரிசர்வ் வங்கி இந்தியாவின் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியபடி, ஒரு வங்கிப் பயனாளர், தனது டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனையை ஒருபோதும் மேற்கொள்ளாதவராக இருந்தால், அவருடைய கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வசதியை ரத்து செய்யுமாறு…

மேலும்...