புதுடெல்லி (17 ஜன 2020): இந்திய வங்கிகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அதன் வசதி ரத்து செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன்மூலம் ரிசர்வ் வங்கி இந்தியாவின் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியபடி, ஒரு வங்கிப் பயனாளர், தனது டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனையை ஒருபோதும் மேற்கொள்ளாதவராக இருந்தால், அவருடைய கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வசதியை ரத்து செய்யுமாறு வங்கிகளுக்கு ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.
ஜனவரி 15ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இதுவரை ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளாத அட்டைகளுக்கு, அந்த வசதியை ரத்து செய்துவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
வங்கிக் கணக்கு மோசடிகளைத் தவிர்க்க வங்கிகளுக்கு ஆர்பிஐ அளித்திருக்கும் புதிய கொள்கைகளில் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.