தேச விரோதி – ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைருக்கு எதிராக பாஜக தலைவர் காவல்துறையில் புகார்!

புதுடெல்லி (06 செப் 2022): பிரபல ஊடகவியலாளரும் Alt News இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு எதிராக பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, காவல்துறையில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில், ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போது ஒரு கேட்சை கைவிட்டதால், கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் சமூக ஊடகங்களில் மோசமான ட்ரோலிங்கிற்கு உட்படுத்தப்பட்டார். சமூக…

மேலும்...

மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை ஆய்வு செய்ய ஒன்றிய அமைச்சர் கோரிக்கை!

பாட்னா (03 செப் 2022): பீகாரில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை உத்தரபிரதேசத்தில் உள்ளதைப் போன்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “பீகாரில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளில், குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் உள்ள சீமாஞ்சல் பகுதியில் ஆய்வு நடத்த நிதிஷ் குமார் அரசிடம் கோரிக்கை வைத்தோம். இந்த பிராந்தியங்களில் யார் மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை நடத்துகிறார்கள், யார் தங்குகிறார்கள்…

மேலும்...

பாஜக தலைவர்கள் கனடா நாட்டிற்குள் நுழைய தடை?

டொரோண்டோ (02 செப் 2022): பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பல முக்கிய தலைவர்களின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளை கண்டித்து அவர்கள் கனடாவில் காலடி வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) கனடா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் போன்ற பிற சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிராக இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன….

மேலும்...

வீட்டு பணிப்பெண்ணை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை செய்த பாஜக தலைவர்!

ராஞ்சி (31 ஆக 2022): வீட்டுப் பணிப் பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்திய பாஜக மகளிர் பிரிவு தலைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சீமா பத்ரா, பல ஆண்டுகளாக வீட்டுப் பணிப்பெண் சுனிதாவை கொடூரமாக தாக்கி சிறுநீர் குடிக்க வைத்துள்ளார். இதுகுறித்து பணிப்பெண் பேசிய வீடியோ வைரலானது. அந்த காட்சிகளில் சுனிதா என்ற ஊழியர் உதவியின்றி உட்கார முடியாத நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது. உடலில் காயங்கள் உள்ளன. மேலும் அந்த வீடியோவில், தன்னை கட்டையால் தாக்கியதாகவும், பற்கள்…

மேலும்...

பஜகவிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!

மதுரை (14 ஆக2022): பா.ஜ.,கவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியல் பிடிக்காமல் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பா.ஜ.க,வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ., வும் மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவருமான சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் குறித்து தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவில் அமைச்சரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தேன். பா.ஜ.கவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு…

மேலும்...

பிஹாரில் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய ஆட்சி?

பாடனா (09 ஜூலை 2022): பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சித் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையில் நாளை அவசரமாக கட்சி எம்.பி.க்களுடன் அலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே பிகாரில் அரசியல் மாற்றம் நிகழலாம் என்று உறுதியான குறிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை…

மேலும்...

மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில் தேசிய கொடியை ஏற்ற பாஜக திட்டம்!

புதுடெல்லி (02 ஆக 2022): : ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மசூதி உள்ளிட்ட மத ஸ்தலங்களில் தேசியக் கொடியை ஏற்ற பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சிறுபான்மை பிரிவு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் இதுபோன்ற 7,000 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசியக் கொடியை பாஜக திட்டமிட்டுள்ளதாக, பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஆசாதி கா அம்ரித் மஹோஸ்தவ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நாடு…

மேலும்...

முஸ்லீம் இளைஞர் வெட்டிக்கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

மங்களுரு (29 ஜூலை 2022): கர்நாடக மாநிலம் மங்களுரு அருகே வியாழன் மாலை முஸ்லிம் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் உயிரிழந்த முஸ்லிம் இளைஞர், மங்களூருவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சூரத்கல் அருகே உள்ள மங்கல்பேட்டையில் வசிக்கும் முகமது ஃபாசில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மங்களூர் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பிரவீன் குமார் நெட்டாருவின் குடும்பத்தை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த சம்பவம்…

மேலும்...

ஜாதியை சுட்டிக்காட்டி இளையராஜாவை அவமானப்படுத்திய பாஜக!

புதுடெல்லி (07 ஜூலை 2022): இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக குடியரசுத்தலைவர் அறிவித்துள்ள நிலையில் இது குறித்த அறிவிப்பில் இளையராஜாவை ‘தலித்’ என குறிப்பிட்டு பாஜக அரசு இளையராஜாவை அவமானப்படுத்தியுள்ளது. இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின்,பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அதேவேளை சமீபத்தில் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார். இதற்கான பரிசுதான் எம்பி பதவி என நெட்டிசங்கள் கருத்து தெரிவித்து…

மேலும்...

காஷ்மீரில் பிடிபட்ட பாஜக பயங்கரவதியிடம் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

ஸ்ரீநகர் (04 ஜூலை 2022): காஷ்மீரில் பிடிப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பாஜக வை சேர்ந்தவன் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ரியாஸி பகுதியில் உள்ள கிராம மக்கள் இரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பிடித்து காவல்துறையிடடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள், கைத் துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த இருவரில் ஒருவன் தாலிப் ஹூசைன் ஷா என்பவன் பாஜகவில் நிர்வாகியாக உள்ளான் என்கிற தகவல்…

மேலும்...