வீட்டு பணிப்பெண்ணை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை செய்த பாஜக தலைவர்!

Share this News:

ராஞ்சி (31 ஆக 2022): வீட்டுப் பணிப் பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்திய பாஜக மகளிர் பிரிவு தலைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சீமா பத்ரா, பல ஆண்டுகளாக வீட்டுப் பணிப்பெண் சுனிதாவை கொடூரமாக தாக்கி சிறுநீர் குடிக்க வைத்துள்ளார். இதுகுறித்து பணிப்பெண் பேசிய வீடியோ வைரலானது. அந்த காட்சிகளில் சுனிதா என்ற ஊழியர் உதவியின்றி உட்கார முடியாத நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது. உடலில் காயங்கள் உள்ளன. மேலும் அந்த வீடியோவில், தன்னை கட்டையால் தாக்கியதாகவும், பற்கள் உடைக்கப்பட்டதாகவும், தரையில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்ததாகவும் சுனிதா கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பாஜக சீமாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது. மேலும் உடல் ரீதியாக பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சுனிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலம் கும்லாவைச் சேர்ந்த 29 வயதான சுனிதா, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சீமா பத்ராவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக வந்துள்ளார்.கடந்த 6 ஆண்டுகளாக சீமாவால் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சுனிதா குற்றம் சாட்டியுள்ளார். சுனிதாவின் குற்றச்சாட்டை அடுத்து சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

சீமா பத்ரா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் (ஐஏஎஸ்) அதிகாரி மகேஷ்வர் பத்ராவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply