தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்!

சென்னை (14 மார்ச் 2020): தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளது தமிழக கல்வித்துறை. மேலும் கேரளாவை ஒட்டிய பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது

மேலும்...

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

சென்னை (04 பிப் 2020): 5 மற்றம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் முன்னோடி திட்டமாக, இதை நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு, கல்வியாளர்கள், குழந்தை பாதுகாப்பு அமைப்பினர் என, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும். குழந்தை பருவத்திலேயே தேர்வு…

மேலும்...

சீனாவுக்கான சவூதி ஏர்லைன்ஸ் விமானம் காலவரையின்றி ரத்து!

ரியாத் (03 பிப் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவுக்கான சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சீனாவுக்கான விமான போக்குரவத்தை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துள்ளன. அந்த வரிசையில் சவூதி அரேபியாவும் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து தொடரும் என்றும்…

மேலும்...