வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை – முதல்வர் கூட்டத்தில் ஆலோசனை!

சென்னை (22 டிச 2022): கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது. உலகளவில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மேலும்...

யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை மீண்டும் தொடக்கம்!

கொழும்பு (12 டிச 2022): யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவையை இலங்கை மீண்டும் தொடங்கியுள்ளது. கோவிட் பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட விமானச்சேவை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. இலங்கை விமான நிலைய அதிகார சபையின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு அலையன்ஸ் ஏர் வாரத்திற்கு நான்கு முறை செயல்படும். சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாண விமான நிலைய ஓடுபாதை மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது 75…

மேலும்...

மாண்டஸ் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் – VIDEO

சென்னையை புரட்டிப் போட்ட மாண்டஸ் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.

மேலும்...

சென்னைக்கு வந்த அதிவேக வந்தே பாரத் ரெயில்!

சென்னை (07 நவ 2022): அதிவேக பயணத்தை மேற்கொள்ளும் வந்தே பாரத் தன்னுடைய 5வது பயணத்தை சென்னையில் இருந்து மைசூர் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 11ஆம் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் அடுத்த கட்ட பயணமாக 5வது வந்தே பாரத் ரயில், சென்னையில் இருந்து மைசூருக்கும் மைசூரிலிருந்து சென்னைக்கும் இயக்க, சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதன் இறுதி கட்ட ஒத்திகை பயணம் இன்று காலை தொடங்கியது. சென்னை…

மேலும்...

சொந்த காருக்கு தீ வைத்துவிட்டு நாடகமாடிய பாஜக நிர்வாகி!

சென்னை (16 ஏப் 2022): சென்னை மதுரவாயலில் தனது காரை தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக நாடகமாடி பாஜக மாவட்டச் செயலாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1 வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (48) பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் நிறுத்தியிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிவதை கண்டு அக்கம்பத்தினர் தண்ணீர் ஊற்றி அனைத்தனர். இதையடுத்து…

மேலும்...

சென்னை மேயராகும் 28 வயது பிரியா ராஜன்!

சென்னை (03 மார்ச் 2022): சென்னை மேயராக 28 வயது பிரியா ராஜன் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். சென்னை மாநகராட்சியில், திமுக மட்டும் 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றிப்பெற்ற 100-க்கும் மேற்பட்ட பெண்களில், ரிப்பன் மாளிகையை ஆளப் போகும் மேயர் பதவி யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதென்ற எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில், திரு.வி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 74-வது வார்டில் வெற்றி பெற்ற பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 28 வயதான பிரியா ராஜன்…

மேலும்...

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது ஏன்? – காவல்துறை பரபரப்பு விளக்கம்!

சென்னை (10 பிப் 2022): சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது பாஜக தலைமை அலுவலகம். நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது…

மேலும்...

சென்னை பாஜக தலைமை அலுவலக குண்டு வெடிப்பில் தொடர்புடைய வினோத் என்பவர் கைது!

சென்னை (10 பிப் 2022): சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது பாஜக தலைமை அலுவலகம். நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர்…

மேலும்...

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை (30 டிச 2021): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 8 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மழைநீர் தேக்கம் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, போக்குவரத்து நெரிசல், மழைநீர் தேக்கம் போன்றவற்றால் பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

மேலும்...