வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை – முதல்வர் கூட்டத்தில் ஆலோசனை!

Share this News:

சென்னை (22 டிச 2022): கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது.

உலகளவில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


Share this News:

Leave a Reply