உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் கத்தார் சிறுமிகள்!
தோஹா (02 டிச 2022): தோஹாவின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உலகக் கோப்பை ரசிகர்களை அன்பால் போர்த்தி இனிப்புகளுடன் வரவேற்கும் கத்தார் சிறுவர் சிறுமிகளைப் பார்த்து கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலிர்த்துப் போகின்றனர். அரபு நாடுகள் மற்றும் கத்தாரின் விருந்தோம்பலை இந்த குழந்தைகள் உலகிற்கு காட்டி ஆச்சர்யப்படுத்துகின்றனர். உலகக் கோப்பை கால்பந்துக்கு வரும் ரசிகர்களின் முக்கிய பயண பாதை தோஹா மெட்ரோ ஆகும். போட்டி நேரத்தில் மெட்ரோ நிரம்பியிருக்கும். ஒவ்வொரு நிலையமும் வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் கலவையாகும்….