தோஹா (02 டிச 2022): தோஹாவின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உலகக் கோப்பை ரசிகர்களை அன்பால் போர்த்தி இனிப்புகளுடன் வரவேற்கும் கத்தார் சிறுவர் சிறுமிகளைப் பார்த்து கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலிர்த்துப் போகின்றனர்.
அரபு நாடுகள் மற்றும் கத்தாரின் விருந்தோம்பலை இந்த குழந்தைகள் உலகிற்கு காட்டி ஆச்சர்யப்படுத்துகின்றனர்.
உலகக் கோப்பை கால்பந்துக்கு வரும் ரசிகர்களின் முக்கிய பயண பாதை தோஹா மெட்ரோ ஆகும். போட்டி நேரத்தில் மெட்ரோ நிரம்பியிருக்கும். ஒவ்வொரு நிலையமும் வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் கலவையாகும்.
இந்த நெரிசலில் தான் பெரும்பாலான ஸ்டேஷன்கள் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி . ‘அஹ்லான்பிக்கும் கத்தார்’ (கத்தாருக்கு வருக) என்ற வரவேற்புச் சொற்றொடரைச் சிரித்து இனிமையாகச் சொல்லி, இனிப்புப் பொட்டலங்களைக் கொடுக்கிறார்கள் இந்த சிறுவர்கள்.
சிலர் வியாபாரம் என்று நினைத்து ஏற்றுக்கொள்ளத் தயங்குவதைக் காணலாம். ஆனால் இந்தக் குழந்தைகள் இது அன்பின் பரிசு இதற்கு காசு தேவையில்லை என்பதாகக் கூறி நெகிழ வைக்கிறார்கள்.
கத்தாரின் வருங்கால சந்ததியினர் கத்தார் மற்றும் அரபு நாடுகளின் விருந்தோம்பலை உலகிற்கு எடுத்துச் செல்கிறது. மேற்கத்திய ஊடகங்களின் பிரச்சாரத்தால் தவறாக வழிநடத்தப்பட்ட கால்பந்து ரசிகர்களும் இதையெல்லாம் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்.