வட இந்தியாவில் கடும் குளிர்; இரண்டு நாட்களில் 260 ரயில்கள் ரத்து!
புதுடெல்லி (10 ஜன 2023): வட இந்திய மாநிலங்களில் கடுமையான குளிர்காலம் தொடர்கிறது. டெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. பனிமூட்டம் காரணமாக சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மூடுபனி காரணமாக கடந்த 2 நாட்களில் 260 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டெல்லியில் காற்றின் தரம் குறைந்ததால் பிஎஸ்3 பெட்ரோல் மற்றும்…