வட இந்தியாவில் கடும் குளிர்; இரண்டு நாட்களில் 260 ரயில்கள் ரத்து!

Share this News:

புதுடெல்லி (10 ஜன 2023): வட இந்திய மாநிலங்களில் கடுமையான குளிர்காலம் தொடர்கிறது. டெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

பனிமூட்டம் காரணமாக சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மூடுபனி காரணமாக கடந்த 2 நாட்களில் 260 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டெல்லியில் காற்றின் தரம் குறைந்ததால் பிஎஸ்3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்4 டீசல் கார்களுக்கு வெள்ளிக்கிழமை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply