கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

அம்பாலா (09 டிச 2020): கொரோனா தடுப்பூசி சோதனைக்காக தன்னார்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ளார். இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இதில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, மூன்றாம் கட்ட சோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில்…

மேலும்...

தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரிக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (06 டிச 2020): தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது வரை தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல், பொதுமக்கள் மட்டுமில்லாது, அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களையும் பாதித்துவருகிறது. இந்தியாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட பலரையும் கொரோனா வைரஸ் பாதித்தது. தமிழகத்தைப்…

மேலும்...

ஒரு ஹேப்பி நியூஸ் – உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு வழங்க அனுமதி!

லண்டன் (02 டிச 2020): பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் நிலையில் பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர். இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. லண்டன்: பிரிட்டனில்…

மேலும்...

பாஜக எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் மரணம்!

ஜெய்ப்பூர் (30 நவ 2020): கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த ராஜஸ்தான் மாநில பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில், ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஈ கிரண் மகேஸ்வரி (வயது 59). இவர் கடந்த வாரம், இவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்….

மேலும்...

கல்லூரி இளைநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7 ஆம் தேதி முதல் தொடக்கம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

சென்னை (30 நவ 2020): தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, தமிழத்தில் டிச.31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு . மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் டிசம்பர் 7 ஆம்…

மேலும்...

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து – 5 நோயாளிகள் பலி!

ராஜ்கோட் (27 நவ 2020): குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5பேர் பரிதாபாமாக உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்…

மேலும்...

டிசம்பர் 31 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கான தடை நீடிப்பு!

புதுடெல்லி (27 நவ 2020): கோவிட் சூழல் காரணமான சர்வதேச விமானங்களுக்கான தடை டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சேவைகள் தொடரும் என்று டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கு வெளியே சிக்கித் தவிக்கும்வர்களை திருப்பி அழைப்பதற்கான வந்தே பாரத் திட்டம் இதற்கு பொருந்தாது. குளிர்காலத்தை அடுத்து இரண்டாவது அலை…

மேலும்...

டிசம்பர் 20 ஆம் தேதி வரை ஊரடங்கு

ஜெர்மனி (26 நவ 2020): ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனாவால் 9.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கை பற்றி தனது அமைச்சர்களுடன் அந்நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்பொழுது, ஜெர்மனியில் நவம்பர் இறுதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது. அதனால், வரும் டிசம்பர் 20ந்தேதி…

மேலும்...

94.5 சதவீதம் திறன் கொண்ட கொரோனா தடுப்பூசிகண்டுபிடிப்பு!

நியூயார்க் (16 நவ 2020): அமெரிக்காவின் மார்டனா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மார்டனா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம்…

மேலும்...

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு கொரோனா – சீனா குற்றச்சாட்டு!

புதுடெல்லி (16 நவ 2020): இந்திய நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட தாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் பாசு இன்டர்நேசனல் நிறுவனம் சீனாவுக்கு அனுப்பிய பதப்படுத்திய மீன்களில் மாதிரிகளை எடுத்துச் சோதனை செய்ததில் 3 மாதிரிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகச் சீனச் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்திடம் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய ஒருவாரத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும்...