ஜெய்ப்பூர் (30 நவ 2020): கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த ராஜஸ்தான் மாநில பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஈ கிரண் மகேஸ்வரி (வயது 59). இவர் கடந்த வாரம், இவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் கடந்த 14வது மக்களவை தேர்தலில் உதய்பூர்-ராஜ்சமந்த் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.