தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கோரிக்கை!

சென்னை (21 ஜூன் 2020): தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் கல்வி கற்றுத் தேர்வு எழுதவுள்ள பிற மாநில மாணவர்களின் நலனையும் தமிழக அரசு கவனத்தில்கொண்டு, அவர்களுக்கும் பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வதோடு, அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 09.06.2020 அன்று தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள், “கொரோனா…

மேலும்...

படுத்தபடி வாதிட்ட வழக்கறிஞர் – கண்டித்த உச்ச நீதிமன்ற நீதிபதி!

புதுடெல்லி (21 ஜூன் 2020): உச்ச நீதிமன்ற விசாரணை ஒன்றில் ஆன்லைன் விசாரணையில் வழக்கறிஞர் ஒருவர் கட்டிலில் படுத்தபடி ஆஜரானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற விசாரணைகள் காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நடத்திய காணொலி காட்சி அமர்வு ஒன்றில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் ‘டி-சர்ட்’ அணிந்தவாறு கட்டிலில் சாய்ந்து படுத்து கொண்டு வாதாடினார். இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி எஸ்.ரவீந்திர பட், “நாம்…

மேலும்...

இன்று முதல் தீவிர ஊரடங்கு அமல்!

சென்னை (21 ஜூன் 2020): இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் 19.06.2020 அதிகாலை 00 மணி முதல் 30.06.2020 இரவு 12 மணி வரை…

மேலும்...

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற யோகா செய்யுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

புதுடெல்லி (21 ஜூன் 2020): சுவாச மண்டலத்தை தாக்‍கும் கொரோனா வைரசிலிருந்த விடுபட யோகா செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்‍கிய நாடுகள் சபை அறிவித்தது. கடந்த 2015-ம் ஆண்டு முதல், யோகா தினம் கடைபிடிக்‍கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர், சிறப்பு நேரலை யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, ஊரடங்கு…

மேலும்...

சென்னை விமான நிலைய சிஐஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 ஜூன் 2020): சென்னை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை நிர்வாக அலுவலகத்தில் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் நிர்வாக அலுவலகம் சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ளது. இங்கு, பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 7 பேருக்கு கொரோனா வைரஸ்…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

சென்னை (21 ஜூன் 2020): பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களீன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது . அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக்…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (20 ஜூன் 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவிலும் அது அதி வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு…

மேலும்...

ஜூன் 21 ஆம் தேதி முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் சவூதி அரேபியா!

ரியாத் (20 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சவூதி அரேபியா இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இதுகுறித்து சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜுன் 21 2020 முதல் அனைத்து பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகள் இயங்கும். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தல் அவசியமாகும். வெளிநாட்டு விமான…

மேலும்...

கேள்விகள் 10: வெளிப்படைத் தன்மை இல்லாத பிரதமர் நிவாரண நிதி! (வீடியோ)

கொரோனா நிவாரண நிதியாக பி.எம்.கேர் என்ற பெயரில் வசூலான தொகை குறித்தோ அதன் கணக்கு வழக்குகள் குறித்து பொதுவில் வராதது குறித்து எழுப்பும் 10 கேள்விகள்.

மேலும்...

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

புதுடெல்லி (19 ஜூன் 2020): உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,532 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 13,586 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 336 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 12,573 பேர் உயிரிழந்த நிலையில் 2,04,711 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 120,504…

மேலும்...