கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி!
துபாய் (09 ஆக 2021): இந்தியாவில் கோவ்ஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வர அனுமதிவழங்கப்பட்டுள்ளனர். துபாய் திரும்புவதற்கு விசா வைத்திருப்பவர்கள் இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றிருந்தால் இரண்டாவது டோஸ் எடுத்து 14 நாட்களுக்குப் துபாய் வர அனுமதிக்கப்படுகிறார்கள். இது மான நிறுவனங்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வருவது குறித்து உறுதியற்ற தன்மை இருந்த நிலையில் தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.