துபாய் (21 ஜூன் 2021): இந்தியாவில் கோவிஷீல்ட் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலை அடுத்து அங்கிருந்து இந்தியர்களுக்கு பயணம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 23 ஆம்தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிற்கான பயணத்தடையை நீக்குகிறது. அதேவேளை ஐக்கிய அரபு அமீரகம் அங்கிகரித்துள்ள தடுப்பூசி இரண்டு டோஸ் பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி துபாயில் போடப்படும் அஸ்ட்ராஜெனெகா இந்தியாவின் கோவிஷீல்ட் இரண்டும் ஒரே வகை தடுப்பூசி என்பதால் கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டு டோஸ் பெற்றவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல சினோஃபார்ம், ஸ்பூட்னிக் மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளையும் ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரித்துள்ளது.
வரும் ஜூன் 23 முதல் எமிரேட்ஸ் துபாய் சேவையைத் தொடங்கவுள்ளது. அதன்படி துபாய்க்கு வருபவர்களுக்கு புதிய கோவிட் நெறிமுறை அறிவிக்கப்பட்டது. பயணத்தின் 48 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் சோதனையின் நெகட்டிவ் சான்றிதழ் பெறப்பட வேண்டும். அதேபோல துபாய் விமான நிலையத்திற்கு வரும்போதும் , பயணிகள் மற்றொரு பி.சி.ஆர் சோதனை எடுக்க வேண்டும். மேலும் கோவிட் சோதனைக்கான QR குறியீடும் கட்டாயமாகும்.